மாவட்டக் கழகச் செயலாளர்கள் கவனத்திற்கு! விவசாயிகள் - சிறு வணிகர்களைப் பாதிக்கும் 3 வேளாண் சட்டங்கள் மத்திய - மாநில அரசுகளுக்கு எதிராக நடைபெறவுள்ள கண்டன ஆர்ப்பாட்டத்தில் எழுப்பப்பட வேண்டிய முழக்கங்கள் மற்றும் பொதுமக்களிடம் கொண்டு சேர்க்கப்பட வேண்டிய துண்டுப் பிரசுரம் ஆர்ப்பாட்டத்தின் போது எழுப்பப்பட வேண்டிய முழக்கங்கள்: திரும்பப் பெறு… திரும்பப் பெறு... பா.ஜ.க. அரசே… மோடி அரசே... விவசாயிகளை வஞ்சிக்கும் வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெறு! ஓயமாட்டோம்… ஓயமாட்டோம்... விவசாயிகள் நலன் காக்கும்வரை ஓயமாட்டோம்.. ஓயமாட்டோம்.. வீழ்வது நாமாக இருப்பினும்; வாழ்வது விவசாயிகளாக இருக்கட்டும்! எதிரானது… எதிரானது... பா.ஜ.க. அரசின் வேளாண் சட்டம் விவசாயிகளுக்கு எதிரானது; விவசாயத் தொழிலாளர்களுக்கு எதிரானது! எதிரானது… எதிரானது... பா.ஜ.க. அரசின் வேளாண் சட்டம் மாநில உரிமைகளுக்கு எதிரானது; கூட்டாட்சித் தத்துவத்துக்கு எதிரானது! அனுமதியோம்... அனுமதியோம்... கார்ப்பரேட் நிறுவனங்களை வளர்த்திடும் பா.ஜ.க. அரசின் வேளாண் சட்டத்தை அனுமதியோம் அனுமதியோம்... பதுக்கலுக்குப் பாதை ...