அடுத்தவருக்காக கண்ணீர் விட அனுமதிக்காத அறிவிலிருந்து என்னை விலக்கி வை.. சின்னக்குழந்தைகளின் முன்பு பணிய வைக்காத எந்தப்பெருமையிலிருந்தும் என்னை விலக்கி வை என்றார் லெபனான் பெருங்கவி #கலில்ஜிப்ரான்.. .. திராவிட இயக்கம் அதன் பயணத்தில் தெளிவாக இருக்கிறது .. எங்கோ உ.பி.யில் நடந்ததுதானே நமக்கேன் என இல்லாமல் இந்தியாவில் வேறெந்த மாநில தலைவர்களோ கவலைபடாத போதும் திமுக போராடுகிறது .. திமுக மகளிரணி தலைவர் மானமிகு கனிமொழி அவர்கள் தலைமையில் ஆர்ப்பாட்டம் .. மக்கள் கண்ணீர் சிந்தும் போது அதிகாரபோதையில் தள்ளாடுபவர்களுக்கு இதெல்லாம் தெரியாது.. பாதிக்கபடுபவர்கள் தலித்தாக, சிறுபான்மை சமூகமாக, பிராமணர் தவிர்த்த இந்துவாக இருந்தால் அரசும் நீதிமன்றமும் கள்ளமௌனம் காக்கும்.. இந்தியாவில் பொதுவுடமைவாதிகள் என அறியபடுகிறவர்கள் கூட சத்தமில்லாமல் நூலிழையில் போராடுவார்கள்.. ஆனால் திராவிட இயக்கங்கள் தான் தன்பாதையை தெளிவாக வரையறுத்து கொஞ்சமும் நகராமல் தன் கடமையை செய்கிறது .. .. நீண்ட பெருஞ்சுவரை திராவிடம் நமக்கு கட்டிதந்திருக்கிறது ..பேராசான் தொடங்கி பேரருளாளன் வரை கட்டிய சுவர் நம்மை காத்துநிற்கிறது...