முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

நான் முதல்வன் வெறும் எழுத்தல்ல மாணவர்களின் தலையெழுத்து

 
சமீபத்திய இடுகைகள்

விவசாயிகளின் வயிற்றில் அடிக்கும் வட்டார உதவி வேளாண்மை இயக்குனர்கள்

தனியாருக்கு முறைகேடாக விதை விற்பனை: லஞ்ச ஒழிப்பு போலீசாரிடம் சிக்கிய வேளாண் உதவி இயக்குநர்! திருவாரூர் மாவட்டத்தில் உள்ள வலங்கைமான் வேளாண்மை உதவி இயக்குநர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு மற்றும் ஊழல் தடுப்பு பிரிவு காவல்துறையினர் நடத்திய அதிரடி சோதனையில், கணக்கில் வராத 23,42,150 ரூபாய் பணம் கைப்பற்றப்பட்டது. வேளாண்மை உதவி இயக்குநரின் வீட்டிலும் லஞ்ச ஒழிப்பு காவல்துறையினர் சோதனையில் ஈடுபட்டார்கள் வேளாண்மைத்துறையில் பணியாற்றும் அலுவலர்களில் பெரும்பாலானோர், பல்வேறு முறைகேடுகளில் ஈடுபடுவதால், விவசாயிகளுக்கு நியாயமாக கிடைக்க வேண்டிய சலுகைகள், பலன்கள், கிடைக்காமல் போய்விடுகிறது. அதிகளவில் லஞ்சம் மற்றும் ஊழல்கள் தாண்டவமாடக்கூடிய துறையாக இது திகழ்கிறது. ஆனாலும் லஞ்ச ஒழிப்பு காவல்துறையினரிடம் இவர்கள் பெரும்பாலும் சிக்குவதே இல்லை. இந்நிலையில்தான், திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் வேளாண்மைத்துறை உதவி இயக்குநர் அலுவலகத்தில் சோதனை நடத்தி, 23,42,150 ரூபாய் பணத்தை கைப்பற்றி சட்டப்பூர்வமான நடவடிக்கை எடுத்திருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருப்பதோடு, விவசாயிகள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது. தமிழக அரசின் ...

சமூகநீதி

சமூகநீதியை பின்பற்றுகிறதா? பாஜக எக்காலத்திலும் சாத்தியமில்லை .. அதை நடமுறை படுத்துகிற துணிவும் பாத்துக்காக்கிற ஆற்றலும் அறிவாலயத்திற்கு மட்டுமே உண்டு...

கலைஞர் என்னும் மனிதர்

சுப்பிரமணிகளும்- திருப்பதிகளும்- ராமன்களும் நிறைந்த ஒரு ஊரில் - இளம்பரிதிகளும் - சிற்றரசுகளும் - தென்னவன்களும் - குணசேகரன்களும் - முத்தமிழ்ச்செல்விகளும் -அன்புக்கரசிகளும் - நிறைந்திருப்பதற்குக் காரணம் கலைஞரும் அண்ணாவும் பெரியாரும்தான். என் தலைமுறைக்கு பெரியார் புகைப்படமாக வந்து சேர்ந்தார். அண்ணா புத்தகங்களாக வந்து சேர்ந்தார். கலைஞர் மட்டும்தான் குரலாக - எழுத்தாக - திரைப்படமாக - பதவியாக - அதிகாரமாக- வந்து சேர்ந்தார். தி.மு.க என்பதை ஒரு கட்சியாக இல்லாமல் திராவிட இயக்கத்தின் தொடர்ச்சி என எங்களுக்குள் விதைத்தவர் கலைஞர் தான்.

தமிழ்

பாடுக குயிலே பாடுக! தாய்நெடும் நிலத்தின் தமிழாளனை தாயுமான தமிழ்முதல்வனை இன்னும் பாடுக குயிலே... பாடுக!  பழநிபாரதி

உனக்கு நீயே ஒளியாய் இரு

உனக்கு நீயே ஒளியாய் இரு... தானே ஏற்றிகொண்ட ஒளியில் தன்னையும் தம் இனத்தையும் ஒளி ஏற்றுக்கிறார்... #தமிழ்நாடுஒளியேறுகிறது

தலைமுறைக்கான தலைமை

மிகச்சிறந்த தலைமுறைக்கான வழி... UdhayanidhiStalinMLA