முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

கலைஞரின் மொழி

அடுத்தவருக்காக கண்ணீர் விட அனுமதிக்காத அறிவிலிருந்து என்னை விலக்கி வை..
சின்னக்குழந்தைகளின் முன்பு பணிய வைக்காத எந்தப்பெருமையிலிருந்தும் என்னை விலக்கி வை
என்றார் லெபனான் பெருங்கவி #கலில்ஜிப்ரான்..
..
திராவிட இயக்கம் அதன் பயணத்தில் தெளிவாக இருக்கிறது .. எங்கோ உ.பி.யில் நடந்ததுதானே நமக்கேன் என இல்லாமல் இந்தியாவில் வேறெந்த மாநில தலைவர்களோ கவலைபடாத போதும் திமுக போராடுகிறது .. திமுக மகளிரணி தலைவர் மானமிகு கனிமொழி அவர்கள் தலைமையில் ஆர்ப்பாட்டம் ..
மக்கள் கண்ணீர் சிந்தும் போது அதிகாரபோதையில் தள்ளாடுபவர்களுக்கு இதெல்லாம் தெரியாது.. 
பாதிக்கபடுபவர்கள் தலித்தாக, சிறுபான்மை சமூகமாக, பிராமணர் தவிர்த்த இந்துவாக இருந்தால் அரசும் நீதிமன்றமும் கள்ளமௌனம் காக்கும்.. இந்தியாவில் பொதுவுடமைவாதிகள் என அறியபடுகிறவர்கள் கூட 
சத்தமில்லாமல்  நூலிழையில் போராடுவார்கள்..
ஆனால் திராவிட இயக்கங்கள் தான் 
தன்பாதையை தெளிவாக வரையறுத்து கொஞ்சமும் நகராமல் தன் கடமையை செய்கிறது ..
..
நீண்ட பெருஞ்சுவரை திராவிடம் நமக்கு கட்டிதந்திருக்கிறது ..பேராசான் தொடங்கி பேரருளாளன் வரை கட்டிய சுவர் நம்மை காத்துநிற்கிறது .. உயர்ஜாதி வன்மம் தொடராமல், ஆணவம் அகங்காரத்தை அடித்துடைத்திருக்கிறது பலவழிகளில் இப்போதும் சலசலப்பை தந்தாலும் கடைசியில் மண்ணை கவ்வுகிறது பார்பனீயம்.. 
அறிவாயுதம் கொண்டு வெல் என எமக்கு திராவிடம் கற்றுதந்திருக்கிறது .. எல்லாநிலையிலும் ஜனநாயம் மதிக்கபடவேண்டும் அடுத்தவர் உரிமை காக்கபடவேண்டும் அநீதி கண்டு போராடவேண்டும் என தெளிவாய் உரைத்திருக்கிறது .. நெடிய பயணத்தில் சொல்லன்னா துயரில் கடும் உழைப்பில் திராவிட கிழவன் சமைத்த பாதையில் பயமின்றி வாழ்கிறோம்..
ஏன் இங்கேயும் சாதிய மோதல் இல்லையா இளம்பெண்கள் சூறையாட படவில்லையா என கேட்கலாம் .. உடனே சமூகம் கொதித்தெழுந்து தன் கண்டனத்தை தருகிறது கவலைக்கொள்கிறது வீராப்பு பேசாமல் விரைந்து நடவடிக்கை கோருகிறது ஆனால் வடமாநிலங்களில் ஒடுக்கபட்ட சமூகம் வாழவே முடிவதில்லை .. உயர்சாதியினர் பாதிக்கபட்டவனுக்கெதிராகவே கலகம் செய்கிறார்கள் அம்மணமாய் அடித்துதைக்கிறார்கள் எங்கள் தயவில் தான் வாழமுடியுமென இறுமாப்போடு கொக்கரிக்கிறார்கள்.. இவையெல்லாம் தமிழகத்தில் நடக்காமல் நம்மை காத்து நிற்பது திராவிடப் பெருஞ்சுவர் தான்..
..
தூத்துக்குடியில் கனிமொழி ஒரு குழந்தையோடு கைதட்டிய படம் ..அந்த குழந்தை #கெப்பரோடு முகத்தை மாற்றியது ரசிக்க வைத்தது .. 
ஹாத்ரஸ் பாலியலுக்கெதிரான மகளிர் மெழுகுவர்த்தியெந்திய போராட்டத்தில் தன் குழந்தையோடு selvendiran.k  தன் இணையர் மற்றும் மகள் குயிலி நாச்சியாரோடு கலந்துக்கொண்டார் .. உலகமே வியந்து நின்றது .. அவர்களையும் குயிலி நாச்சியாரையும் அழைத்து மகிழ்ந்து குழந்தையை போராட்ட களத்திற்கு அதுவும் பெருந்தொற்று காலத்தில் வரகூடாதென அக்கறையோடு அறிவுரை சொல்லி தான் தலைவரின் மகளென்பதை உணர்த்தியிருக்கிறார்.. சிறுகுழந்தைகள் முன்பு பணிய வேண்டுமென்ற கலீல் ஜிப்ரானின் கவிதை ஞாபகம் வந்தது ..
..
கனிமொழி..
அன்பின் மொழி..
அறிவின் மொழி..
பண்பின் மொழி.
கலைஞரின் மொழி..
..
ஆலஞ்சியார்

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

பெண்ணுரிமைப் போராளி

#இன்னம்_ஆறுமாதத்தில் கழக ஆட்சி  அமைந்தவுடன் பெண்பிள்ளைகளை  பாதுகாக்க மாவட்டம் தோறும் சிறப்பு  நீதிமன்றங்கள்  அமைக்கப்படும்...  பெண்ணுரிமைப் போராளி

ஜனநாயாக சக்தி

சனாதன வாதிகளுக்கு  எதிரான பெரும்  ஜனநாயாக சக்தி...

தமிழன்டா

#தமிழன்டா அன்பார்ந்த வாக்கால பெருமக்களே பாத்து ஓட்டுப்போடுங்க தயவுசெய்யுது சிந்தித்து ஓட்டுப்போடுங்க ஒட்டு போடுவது முக்கியம்... * வாங்க நம்ப ஊருக்கு ஒரு பிரச்னை * நம்ப காலேஜில ஒரு பிரச்னை * நம்ப நண்பனுக்கு ஒரு பிரச்னை * இல்ல நம்ப ஸ்டேட்க்கு ஒரு பிரச்னைன்னு வரவங்க கூட சேருவோம்... நம்ப சாதிக்கு ஒரு பிரச்னை நம்ப மதத்திற்கு ஒரு பிரச்னைன்னு சொல்றவங்ககூட தயவுசெய்து `சேராதீங்க´ சொல்றவன் அத்தனை பேரும் நம்பள தூண்டிவிட்டுட்டு அவன் வீட்ல போலீஸ்சோடு பாதுகாப்பாக வக்காந்து இருப்பான் நாம்பதான் மாட்டிகிவோம் தயவுசெய்து புரிஞ்சிக்கீங்க... #உங்கள்_விஜசேதுபதி