தமிழகத்தில் பேரறிஞர் அண்ணாவால் அறிமுகப்படுத்தப்பட்டு, தொடர்ந்து 50 ஆண்டுகளாக நடைமுறையில் உள்ள இருமொழிக் கொள்கையை நிராகரித்து, மும்மொழிக் கொள்கையை முன்னிறுத்தும் #NEP2020-யை மத்திய அரசு நடைமுறைப்படுத்த முயற்சிப்பது நாட்டின் பன்முகத்தன்மைக்கும், கூட்டாட்சித் தத்துவத்திற்கும் எதிரானது.
#NEP2020-ல் 3,5,8 ஆகிய வகுப்புகளுக்கு பொதுத் தேர்வு நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இது ‘இடை நிற்றலை’ ஊக்குவிக்கும்.பள்ளியில் சேர்ந்த மூன்று ஆண்டுகளில், பல மாணவ, மாணவர்கள் படிப்பைக் கைவிட நேரிடும்.
அனைவருக்கும் கல்வி என்பதை அழித்து, ஒரு சிலருக்கு மட்டுமே கல்வி என்ற வர்ணாசிரமக் கோட்பாட்டையும், குலக்கல்வியையும், வழக்கில் இல்லாத சமஸ்கிருத மொழியையும் மீண்டும் புகுத்துவதே #NEP2020-ன் நோக்கம் ஆகும். கல்வியை வணிகமயமாக்கும் உள்நோக்கத்தையும் இப் புதிய திட்டம் உள்ளடக்கியுள்ளது.
அந்தந்த மாநிலங்களில் அவரவர்களுக்கு உரிய கலை, கலாச்சாரம், பண்பாடு, மொழி அடிப்படையில் அமையாத #NEP2020-யை எந்த விதத்திலும் ஏற்றுக் கொள்ள இயலாது. மாநில அரசின் உரிமைகளை தட்டிப்ப பறிக்கின்ற பல கருத்துருக்களுக் கொண்டுள்ள இத்திட்டத்தை மத்திய அரசு உடனடியாகக் கைவிட வேண்டும்.
அதனை மாநில அரசும் சமரசமற்று வலியுறுத்த வேண்டும்

கருத்துகள்
கருத்துரையிடுக