முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

எதிர் கொள்

கவர்னர் பன்வாரிலால் புரோஹித்திற்கும் ,உள்துறை அமைச்சர் அமித்ஷாவிற்கும் கொரானா இருவரும் மருத்துவமனையில் ..தமிழ்கூறும் " நல்லுலகு " அதை கொண்டாடுகிறது வேதனை தருகிறது .. அவர்களின் அரசியலின்பால் அவர்கள் ஏற்றுக்கொண்ட சித்தாந்தத்தின்பால் நமக்கு எதிர்வினை உண்டு இருவரும் நலம் பெற வேண்டும் .. தமிழகத்தின் நிலை கைமீறி செல்லவதை காணும் போது "சமூகபரவல் " குறித்த முதல்வரின் பார்வை அறியாமையின் வெளிபாடாய் தெரிகிறது .. கொரோனா உலகளவில் பெரும்பாதிப்பை ஏற்படுத்தியும் நமது முதல்வர் அதுகுறித்து அறிந்து விரைந்த நடவடிக்கை எடுக்கவில்லை என்பதை இப்போது மக்கள் உணர்கிறார்கள் .. மத்திய மாநில அரசுகளின் அலட்சிபோக்கு இந்திய மக்களின் வாழ்வாதாரத்தை மிகவும் கவலைக்குரிய நிலையில் நிறுத்தியிருக்கிறது .. மீண்டுவர சில மாதங்கள் தேவைபடும்,. ************************************** நேற்றும் இன்றும் திமுக அதிகளவில் பேசபடுகிறது ராசாவின் குரலும், திமுகவின் புதிய கல்விக் கொள்கை குறித்த அக்கறையும் .. பெரியாரை அண்ணாவை உள்வாங்கி கலைஞரிடம் அரசியல் பயின்ற மாணவர் ராசா .. தனக்கு அளிக்கபட்ட பதவிகளின் பொறுப்பை உணர்ந்து செயல்படுபவர்.. அமைச்சராக இருந்தபோது தொலைப்பேசி எண்ணை எந்த நிறுவனத்தோடும் மாற்றிக்கொள்ளலாம் .. விரும்பிய நிறுவனத்தில் அலைகற்றை பெறலாம் என்ற பொதுநோக்கு பார்வை சில கார்பரேட் நிறுவனங்களின் கோபத்தை தந்தது .. அலைபேசியின் அழைப்பிற்கான விலை நிர்ணயத்தை வெகுவாக குறைத்தது போன்ற புரட்சிகளை செய்தவர் .. அவர்மீது சுமத்தபட்ட குற்றசாட்டை/வீண்பழியை தனியொருவனாக எதிர்கொண்டு தன் வாத திறமையால் தான் பெற்ற அறிவால் திராவிடம் தந்த துணிவால். அஞ்சுவதில்லை நாம் நேர்மையும் அறமும் நம் பக்கம் இருக்கும் போது தூய்மையாளர்களை நீதி காவுகேட்காது என்ற நம்பிக்கையோடு தன் மீது மட்டுமல்ல திராவிட இயக்கத்தின் மீதும் ..கலைஞர் மீதும் படிந்த கரையை துடைந்தெறிந்த மாவீரன்.. நேற்றைய தினம் நடத்திய "#திராவிட_தாண்டவம்" ஆரியத்தின் வீசப்பட்ட திராவகமாய் இருந்தது .. தெளிவான விளக்கம் .. புத்தகமாக வெளியிடலாம்.. .. தேசிய கல்விக்கொள்கைக்கெதிராக திமுக ஏற்பாடு செய்த கருத்தரங்கம் கல்வியாளர்கள் பங்கேற்றார்கள் திரு.ஸ்டாலின் மாநில அரசிடமிருக்கும் மிச்ச அதிகாரங்களையும் பறிப்பது கோடாரி கொண்டு வெட்டும் செயல் என்றார்.. ஆம் ஆரம்பள்ளியிலேயே வடிக்கட்ட நினைக்கும் பாசிசத்தின் செயல் ஏழைகுழந்தைகளுக்கு உள்கிராமங்களில் வசிக்கும் குழந்தைகள் இனி கல்வியென்பதே எட்டாக்கனியாகிவிடுமோ என்ற கவலை நமக்கு ஏற்படுகிறது .. புதிய கல்விக்கொள்கை குறித்து முன்பே கலைஞர் எச்சரித்திருந்தார். நீட் தேர்வு வந்த பிறகு மருத்துவம் பணமுள்ளவர்களுக்கு மட்டும் என்ற நிலை வந்துவிட்டது "கோச்சிங்" என்ற கொள்ளையர்களிடம் ஆசை கொண்ட பெற்றோர் பொருளிழக்கும் நிலைதான் .. ஒவ்வொரு படியிலும் தேர்வென்பதே மாணவர்களின் கல்வி மீதான பயத்தையே ஏற்படுத்தும் என மனோதத்துவநிபுணர்கள் பலமுறை எடுத்து சொன்னதுதான்.. கல்விக்கொள்கையில் மாற்றமே செய்யகூடாதா என்பதல்ல மாற்றம் கல்விமுறையை எளிமையாக்கி அதிக திறன்கொண்டவர்களை உருவாக்குவதாக இருக்கவேண்டுமே தவிர வடிகட்டுவதாக இருக்ககூடாது திமுக தனது சமூகநீதி பயணத்தில் மிகவும் சரியான இடத்தில் போராடிக்கொண்டிருக்கிறது எல்லோரையும் படிக்கவைக்க வேண்டும் பட்டதாரியாக்கவேண்டுமென கலைஞர் மாவட்டம் தோறும் மருத்துவ கல்லூரிகளை நிறுவி தமிழகத்தை தலைநிமர செய்தார்.. பத்தாவதில் ஒரு பாடத்தில் தோற்றால் எல்லாபாடத்தையும் திரும்ப எழுதவேண்டுமென்பதை மாற்றி தோற்ற ஒருபாடத்தை மட்டும் எழுதி தேர்ச்சி பெறலாம் என்று அறிவித்து உயர்கல்வியில் பெருமளவில் மாணவர்கள் சேர காரணமானவர் சமூகநீதி காவலர் கலைஞர் அவர்கள் இன்று இந்த கேடுகெட்ட கயவர்களால் தமிழகம் ஒவ்வொரு உரிமையையும் இழந்துவருகிறது .. கல்விக்கொள்கை என்ற பெயரில் செத்த சமஸ்கிருதத்தை ஏன் தூக்கி சுமக்கவேண்டும்.. கல்வியை மாநில பட்டியலுக்கு கொண்டுவருவதே இதற்கெல்லாம் தீர்வாக அமையும் அதற்கான போராட்டம் தொடர வேண்டும் .. திரு.ராசா சொன்னதைப்போல அதிகாரம் கையில் வரும்போது அதற்கான மாற்றம் நிகழும்.. .. ஆலஞ்சியார்

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

பெண்ணுரிமைப் போராளி

#இன்னம்_ஆறுமாதத்தில் கழக ஆட்சி  அமைந்தவுடன் பெண்பிள்ளைகளை  பாதுகாக்க மாவட்டம் தோறும் சிறப்பு  நீதிமன்றங்கள்  அமைக்கப்படும்...  பெண்ணுரிமைப் போராளி

ஜனநாயாக சக்தி

சனாதன வாதிகளுக்கு  எதிரான பெரும்  ஜனநாயாக சக்தி...

தமிழன்டா

#தமிழன்டா அன்பார்ந்த வாக்கால பெருமக்களே பாத்து ஓட்டுப்போடுங்க தயவுசெய்யுது சிந்தித்து ஓட்டுப்போடுங்க ஒட்டு போடுவது முக்கியம்... * வாங்க நம்ப ஊருக்கு ஒரு பிரச்னை * நம்ப காலேஜில ஒரு பிரச்னை * நம்ப நண்பனுக்கு ஒரு பிரச்னை * இல்ல நம்ப ஸ்டேட்க்கு ஒரு பிரச்னைன்னு வரவங்க கூட சேருவோம்... நம்ப சாதிக்கு ஒரு பிரச்னை நம்ப மதத்திற்கு ஒரு பிரச்னைன்னு சொல்றவங்ககூட தயவுசெய்து `சேராதீங்க´ சொல்றவன் அத்தனை பேரும் நம்பள தூண்டிவிட்டுட்டு அவன் வீட்ல போலீஸ்சோடு பாதுகாப்பாக வக்காந்து இருப்பான் நாம்பதான் மாட்டிகிவோம் தயவுசெய்து புரிஞ்சிக்கீங்க... #உங்கள்_விஜசேதுபதி